சமீபத்தில் என்னை கவர்ந்த 12 கட்டளைகளையே எனது முதல் பதிவாக தர விரும்புகிறேன்.அவை:
1
உங்களுடைய படைப்பாற்றலை உலகிற்கு காட்டுங்கள்
( அதனால்தான் 'ப்ளாக்' எழுத முடிவு செய்துள்ளேன்)
2
எப்பொழுதும் புதுப் புது விஷயங்களை யோசித்துக் கொண்டிருங்கள்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டின் தன்னுடைய மனதில் தோன்றிய பிம்பங்களை பெரிய அறிவியல் முன்னேற்றங்களாக மாற்றினார்.அதன் மூலம் இந்த உலகத்தையே பல படிகள் முன்னே கொண்டு சென்றார்.அதுபோல உங்களுடைய புத்திசாலித்தனம்,அதிவேக வளர்ச்சிக்கு துணை புரியும்.
3
எந்த சூழ்நிலையிலும் பயத்துக்கு அடிமையாகி விடாதீர்கள்.
4
அடுத்தவர்கள் துயரத்தோடு இருக்கும்போது, உங்களுடைய வார்த்தைகளால்- செயல்களால் அவர்களுக்கு மருந்து போட தெரிந்து கொள்ளுங்கள்.
5
ஓவ்வொருக்குள்ளும் ஒரு பாடல் இருக்கும்...உங்களுடைய பாடல் எது?
கண்டுபிடியுங்கள்...கூச்சப்படமா ல் அதை உரக்கப் பாடுங்கள்...அதன் மூலம் உங்கள் உணர்வுகளை மற்றவர்கள் புரிந்துக் கொள்வார்கள்.
6
பல சமயங்களில் நாம் நம்முடைய ஆற்றலை உணர்வதில்லை.ஹெலன் ஹெல்லர் என்ற பெண்,அவருக்கு கண் தெரியாது-காது கேட்காது.ஆனால் நல்ல கண் பார்வையும்- கேட்கும் திறனும் கொண்ட பலரது வாழ்க்கையையே மாற்றினார்.அதுபோல் நீங்கள் உங்களுடைய சக்தியை உணர்ந்துக் கொள்ளுங்கள்.அதை பயன்படுத்தவும் செய்யுங்கள்.
7
நம்முடைய இன்றைய சந்தோஷமான வாழ்க்கைக்காக பலபேர் தியாகம் செய்திருப்பார்கள்...அவர்களை எப்போதும் மறந்துவிடவேண்டாம்.
8
எப்பொழுதும் உங்களுக்குள் கருணை பொங்கி கொண்டிருக்கட்டும்..ஏழைகள் உள் ளிட்ட எத்தனையோ பேர் உங்களது கருணையால் பலன் பெறக்கூடும்.
9
விடாமுயற்சி அவசியம்.
10
எப்போதும் தேடுவதை நிறுத்தாதீர்கள்.
யாரும் பயணம் செய்யாத புதிய பாதையில் கால் வைக்க தயங்காதீர்கள்.
11
நாம் ஒவ்வொருவரும் தனித்தனியே உழைத்தால் கிடைக்காத விஷயங்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து பாடுபடும்போது சாத்தியமாகும்.அந்த கூட்டு முயற்சியின் கனிகள், கூடுதல் ருசியோடு இருக்கும்.
12
அடுத்தவர்கள் சோர்ந்திருக்கும் போது, அவர்களை உற்சாகப்படுத்த பழகிக் கொள்ளுங்கள்.
தோல்விகளின் போது ஊக்கம் கொடுங்கள்.
- இவற்றை சொன்னவர், என்னைக் கருத்துகளால் கவர்ந்த- வெள்ளை மாளிகையின் கருப்பர் பாரக் ஒபாமா.

No comments:
Post a Comment